பாரம்பரிய நெல் ரக விதைகள் :விவசாயிகளுக்கு விநியோகம்
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
நெல் விதைகளை, விவசாயிகளுக்கு வழங்கிய வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் கூறியதாவது:
நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளின் மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மைத் துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் (சிவன் சம்பா, துாயமல்லி கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா) போன்ற பாரம்பரிய நெல் ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை போதுமானது.
ஒரு கிலோ விதையின் விலை 70 ரூபாயும், மானியம் கிலோவுக்கு 35 ரூபாயும் போக விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் கிளியனுார், பரங்கினி மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோரை தொடர்புகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு எத்திராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி வேளாண் அலுவலர் இலக்கியா, உதவியாளர் விஜயகுமார் மற்றும் ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி உடனிருந்தனர்.
மேலும்
-
அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
-
எல்லாமே அரைகுறை தானா; சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள்!
-
போராட்டம் நடத்திய கரப்பான் கும்பல் மீண்டும் கைது
-
அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் வெளியேற தயாராகி உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்
-
தமிழ்நாடு பெயர்சூட்டலில் திமுகவின் முயற்சிகள் அடங்கியுள்ளன; ஸ்டாலின்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1560 விலை சரிவு; இன்றைய நிலவரம் இதோ!