காமராஜர் பெயரை மறந்த ராகுல்: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
- நமது நிருபர் -
சென்னை தீவுத்திடலில், நேற்று(அக்டோபர் 11) காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற 'மாணவர்கள் குரல்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். ராகுலுடன் முதல்வர் விஜயும் வருவார் என கூறப்பட்டால், பல மணி நேரமாக, மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால், ராகுல் மட்டும் கால தாமதமாக, இரவு 7:00 மணிக்கு வந்தார். முதல்வர் விஜய் வரவில்லை என்றதும், மாணவர்கள் வெளியேற தொடங்கினர். இதனால், நிகழ்ச்சிக்கு ராகுல் வந்தபோது மாணவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 'காங்கிரசை ஒழிக்க வேண்டும்' என பேசிய ஈ.வெ.ரா., பற்றி புகழ்ந்து பேசினார். அவரைப்பற்றி மாணவர்களிடமும் பெருமையாக ராகுல் கூறினார். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமான காமராஜர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தமிழகத்தில் காமராஜர் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் மற்றும் காமராஜரின் பெருமைகளை ராகுல் பேசவில்லை. இது, தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்ற, மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அமைச்சர் ராஜேஷ்குமார், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் போன்றோர் துாங்கி வழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்களும், எதிர் கோஷ்டிகளும், கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
ஆனால் சாவர்க்கர் பெயர் மற்றும் என்றும் நினைவில் இருக்கும்.
அரை ராகுலுடன் விஜய் சேர்வது தீம்பு விலை விக்கும்.
யிங்க்குள்ள தத்தி லிஸ்டில் இந்த ராகுல் தத்தியையும் சேர்த்து கொள்ளலாம்
இந்த மாதிரி ஒரு ஆளை , உங்க காங்கிரஸ் கட்சியின் தலைவரா இன்னும் வச்சிட்டு இருக்கீங்களே, இதை பார்த்து பொது மக்கள் எங்களுக்கு எவ்வளோ அதிர்ச்சியா இருக்கும்? யோசிச்சு பாருங்க காங்கிரஸ் ஜால்ராக்களே.....
காமராஜர் ஒரு ஹிந்து என்பதால் சோனியா குடும்பத்தாருக்கு அவரை அறவே பிடிக்காது .
ராகுல் கான் அப்படிதான் பேசுவார். இந்திரா பெரோஸ் கானை இந்திய பிரதமர் ஆக்கிய காமராஜர், அதற்கு 2 வருடங்கள் பின் 69ல் வங்கிகள் நாசமாக்கும் திட்டத்தை கொண்டு வந்ததால் வந்த வினை
ஆமாம், இந்திய அரசில் அமைச்சர்களாக இருர்த பலர்- தொடர்ச்சியாக எடப்பாடி மாதிரி காங்கிரஸ் தோல்வி அடைந்தும், ஏன் வேறு கட்சிக்கோ, வேறு வேலைக்கோ போகாமல், அட்டைபூச்சி போல ஒட்டிக் கொண்டு உள்ளீர்கள்
தேசத்தையே கூறு போட்டு விற்றுவிடும்
எண்ணமுள்ளவர் இந்த ஆசாமி
இந்த வருகை அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதி விஜய்தான் என்பதை உறுதிப்படுத்த வந்த வருகையாகத்தான் தெரிகின்றது .ஏன் என்றால் விஜய்க்கு இருக்கும் பொதுஅறிவும் ,சிந்தனையும் ராகுலிடம் இல்லையென்பதே .அதனால் தமிழக மக்கள் விஜய்யை அடுத்த பிரதமர் போட்டியில் இறக்க முன்வரவேண்டும் .காங்கிரஸ் அனுதாபிகளும் இதை முன்மொழியவேண்டும் .இன்றிலிருந்து விஜய்யை அடுத்த பிரதமர் அவர்களே என்றுதான் விளிக்கவேண்டும் .
இவன எல்லாம் நீங்க தானய்யா எதோ எல்லாந் தெரிந்தவன்னு தல மேல தூக்கி வெச்சுக்கிட்டு குதிக்கிறீங்க. இவன் தரம் அறிவு நம்பகத்தன்மை தலைமைப் பண்பு
ஏதாச்சும் கொஞ்சத்துல கொஞ்சமாவது சொல்லிக்கும்படி இருக்கான்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். அப்புறம் அதிர்ச்சி என்ன அதிர்ச்சி? இத்தாலிய கொத்தடிமை புத்தியை கழட்டி உடுங்கய்யா.
திருநாவுக்கரசர் செய்த மாபெரும் தவறு அதிமுகவை விட்டு விலகியது தான்/விலக்கப்பட்டது தான். அவர் மட்டும் அதிமுகவிலேயே நீடித்திருந்தால், ஜெயலலிதாவிற்கு பின் அதிமுக தலைவர் ஆகியிருப்பார்.
தமிழ்நாடு எங்கே இருக்கிறது என தெரியாதவனை கூட்டி வந்து கூட்டம் நடத்தினால் இப்படித்தான். ராகுல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.மேலும்
-
பழுது பார்க்க நிறுத்தியிருந்த காரை திருடி சென்ற மர்ம நபர்
-
பர்கூர் ஜி.ஹெச்.,ல் 1.13 லட்சம் பேருக்கு உணவு அறம் செய்ய விரும்புவோர் சங்கத்தினர் சாதனை
-
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
-
நிறுவன அறிவிப்புகள்
-
கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
-
சொத்து வரியை செலுத்த ஓசூர் கமிஷனர் அறிவுறுத்தல்