பர்கூர் ஜி.ஹெச்.,ல் 1.13 லட்சம் பேருக்கு உணவு அறம் செய்ய விரும்புவோர் சங்கத்தினர் சாதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், அறம் செய்ய விரும்புவோர் சங்கத்தில், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், டி.எஸ்.பி., வக்கீல்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள், ஜவுளிக் கடை உரிமையாளர்கள் என, 33 முதல், 88 வயது வரை, 70 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் கடந்த, 2021 அக்., 10 முதல், பர்கூர் அரசு மருத்துவமனை நோயாளிகள், 50 பேருக்கும், சிறப்பு நாட்களில், 100 பேருக்கும் தினமும் காலை உணவை வழங்கி வருகின்றனர். நான்கு இட்லி, ஒரு வடை, முட்டை, வாழைப்பழம், கடலை பருப்பி, குடிநீர் என சரிவிகித உணவாக வழங்கும் இவர்கள் கடந்த, 5 ஆண்டுகளில், 1,827 நாட்களில், ஒரு லட்சத்து, 13,800 பேருக்கு உணவு வழங்கி சாதனை படைத்துள்ளனர்.இந்த அமைப்பின், 6ம் ஆண்டு துவக்க விழாவில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மதியழகன், பங்கேற்று, மறைந்த தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து அனைவரையும் பாராட்டினார்.
இது குறித்து அமைப்பின் தலைவர் முனுசாமி கூறுகையில், ''5 ஆண்டுகளாக உணவு வழங்கி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றார்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை