பழுது பார்க்க நிறுத்தியிருந்த காரை திருடி சென்ற மர்ம நபர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்தவர் அஸ்வின்ராஜ் வர்மா, 38. கார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்; இவரது மாருதி சுசூகி பலேனோ கார் கடந்த ஜூலை மாதம், 23ம் தேதி, வெலகல்நத்தம் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதனால், அதை பழுதுபார்ப்பதற்காக, கிருஷ்ணகிரியிலுள்ள சர்வீஸ் சாலையில், அசோக் லேலண்ட் பணிமனை முன் நிறுத்தியிருந்தார்.
கடந்த, 9ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, பணிமனை முன் பணியிலிருந்த காவலாளி, டீ சாப்பிட வெளியே சென்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், பணிமனையில் இருந்த அஸ்வின்ராஜ் வர்மாவிற்கு சொந்தமான காரை திருடி சென்றார்.அதேபோல், பணிமனை முன் நின்றிருந்த ஹோண்டா சிவிக் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, திருடுவதற்காக வெளியே நகர்த்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக, அஸ்வின்ராஜ் வர்மா புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், காரை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி