கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், 29ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது.

வரும், 20ம் தேதி வரை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் சிறப்பு ஹோமம், அம்பாள் அபிஷேகம், அபிராமி அந்தாதி பாராயணம், மகா மங்களாரத்தி, கொலு பூஜை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நாட்டிய நிகழ்ச்சியில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும், 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Advertisement