நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் நவராத்திரி கொலு, கலை விழா

சேவூர்: சேவூரில் உள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.) மற்றும் ஸ்ரீ நாச்சா கிட்ஸ் பிளே ஸ்கூல் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு கொலு மற்றும் பாரம்பரிய கலைவிழா நடந்தது.

நவக்கரை நவீன் பிரபஞ்சம் குழுவினரின் கும்மி நடனத்துடன் விழா தொடங்கியது. குழந்தைகளின் கோலாட்டம், மாணவர்களின் பெருஞ்சலங்கையாட்டம் மற்றும் துடுப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பெற்றோரை வெகுவாக கவர்ந்தன.

தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

சேவூரில் உள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.) மற்றும் ஸ்ரீ நாச்சா கிட்ஸ் பிளே ஸ்கூல் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு கொலு மற்றும் பாரம்பரிய கலைவிழா நடந்தது. இதில் பங்கேற்றோர்.

Advertisement