டில்லியில் அனுமதியின்றி போராட்டம், தடுப்புகள் சேதம்; இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு

3



புதுடில்லி: அனுமதியின்றி பேரணி நடத்திய இண்டி கூட்டணி தலைவர்கள் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரியும், எஸ்ஐஆர் நடைமுறையை நீக்க வலியுறுத்தியும் டில்லியில் இண்டி கூட்டணியினர் பேரணி சென்றனர். ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ், மம்தா, தேஜஸ்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதேநேரத்தில் இந்த பேரணி உரிய அனுமதி பெறப்படவில்லை. எனவே போராட்டக் காரர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். அவற்றை எல்லாம் அகற்றி விட்டு, இண்டி கூட்டணியினர் முன்னோக்கி சென்றனர்.

போராட்டம் முடிந்துவிட்ட சூழலில், அனுமதியின்றி பேரணி நடத்தியது, லாரிகளை கொண்டு சாலை தடுப்புகளை உடைத்தது என்று கூறி டில்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். பாரக்ஹம்பா சாலை, திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷன்களில் இண்டி கூட்டணியினர் மீது இந்த எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

முன்னதாக பேரணியின் முடிவில், இண்டி கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர். அதில் 14 குறைபாடுகள் உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement