தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம்

தேனி: இந்திய தபால் துறை சார்பில் தேசிய அஞ்சல் வாரம் அக்.,9 முதல் அக்.,15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேனி அஞ்சல் கோட்டம் சார்பில் தபால் அலுவலகங்களில் ‘ஒரே அஞ்சலக வலைப்பின்னல், எண்ணற்ற சாத்தியங்கள்’ என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அக்.,13 (நாளை)ல் தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம் செய்ய, புதிய சேமிப்பு, ஆயுள் காப்பீடு கணக்குகள் துவங்க சிறப்பு முகாம்கள் நடக்கிறது என தேனி தபால் கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தெரிவித்தார்.

Advertisement