ரயில்வே இடத்தில் விளம்பரம் செய்தவர்களே அகற்றினர்

போத்தனூர்: போத்தனூர் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் விளம்பரங்கள் எழுதிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி செப்., 29ல் துவங்கி, கடந்த 8ல் முடிவடைந்தது.

இதில் ரயில்வே ஸ்டேஷன் வளாகம், நஞ்சுண்டாபுரம் சாலை, ரயில்வே குடியிருப்பு, பாலங்கள், யார்டு உள்ளிட்ட இடங்களில் உரிய அனுமதியின்றி எழுதப்பட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டும், விளம்பர பேனர்கள், பிளக்ஸ்கள் அகற்றப்பட்டும் சுத்தம் செய்யப்பட்டன.

விளம்பரப்படுத்திய வேதா ஸ்போர்ட்ஸ், சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, ஆர்.ஜி.ஆப்டிக்கல்ஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட், ஸ்ரீராம் டியுடோரியல் உள்ளிட்ட, 10 நிறுவனங்களே சுத்தம் செய்தனர்.

இந்நிறுவனங்களிடமிருந்து தலா, 500 வீதம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

போத்தனூர் ஆர்.பி.எப். எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் இப் பணியை செய்தனர்.

Advertisement