தோழிக்காக ஓட்டுநரை தாக்கி காரை பறித்த ரவுடி மகன் கைது
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் யாசின் ஷரிப், 25; கார் ஓட்டுநர். இவர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, 23 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
அப்பெண் யாசின் ஷரிப்புக்கு கடனாக ஆறு லட்சம் ரூபாய் தந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனால் அப்பெண், பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
அவர் தராததால், ஆத்திரமடைந்த அப்பெண், தன் நண்பரும் ரவுடி வெங்கடாவின் மகனுமான ஆகாஷ், 25, என்பவரிடம், யாசின் ஷரிப்பிடம் பணத்தை வாங்கி தரும் கேட்டுள்ளார்.
இதையடுத்து யாசினை நேற்று மாலை தாக்கி, அவரது ‘மாருதி ஷிப்ட்’ காரை, ஆகாஷ் பறித்து சென்றார். வண்ணாரப்பேட்டை போலீசார், காரில் உள்ள ஜி.பி.எஸ்., கருவியை வைத்து, கிண்டி அருகே காரை மடக்கி, ஆகாஷை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement