சதுப்பு நில விவகாரம்: ‘கிரெடாய்’ வழக்கில் வரும் 14ல் உத்தரவு
சென்னை: சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பள்ளிக்கரணையை சுற்றி ஒரு கி.மீ., சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்து, 2025 அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு காரணமாக, கட்டுமான பணிகள் ஸ்தம்பித்து உள்ளதால், பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கூறி, கிரெடாய் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, மாநில சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை சுற்றி உள்ள நில உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து, 23 கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.
இவை ஆய்வு செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இடைக்கால பாதிப்பு மண்டலத்தில், குறிப்பிட்ட 36 சர்வே எண்களில் உள்ள 316.7 ஏக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பான அறிக்கையை அக்., 14க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். அந்த அறிக்கையை பரிசீலித்து, வரும் 14ல், இந்த வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என, தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை