நவராத்திரி நாட்டியாலயா

மதுரை: மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி நிருத்தியோத்ஸவத்தை முன்னிட்டு ஹரிணி நாட்டியாலயா அகாடமி சார்பில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

அகாடமி நிறுவனர் கிருபா ஹரிணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் 3 முதல் 64 வயதுடைய 120 மாணவர்கள் பக்திப் பாடல்களுக்கு பரதம் ஆடினர்.

ஆயுதப்படை துணை கமிஷனர் பிரபாகர், ராணி லேடி மெய்யம்மை கல்லுாரி ஓய்வு பேராசிரியை வைஜெயந்தி மாலா, ஜீவனா பள்ளி முதல்வர் பத்மாவதி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவி காமாட்சி, வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement