கிருஷ்ணகிரியில் அக்டோபர் 22ல் "வீ தி லீடர்ஸ்' மகளிர் மாநாடு; பங்கேற்கிறார் அண்ணாமலை

கிருஷ்ணகிரி: அண்ணாமலை பங்கேற்கும், 'வீ தி லீடர்ஸ்' மகளிர் மாநாட்டிற்கான பந்தல் அமைக்க இன்று (அக்டோபர் 12) பூமி பூஜை நடந்தது.

பா.ஜ., மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த ஜூன், 5ல், அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பில் தற்போது, 21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அடுத்துள்ள வெங்கடேஸ்வரா திடலில் வரும் அக்டோபர் 22ல், மண்டல அளவிலான மகளிர் மாநாடு நடக்கிறது. இதில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.

இதற்கு மேடை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. முன்னாள் எம்.பி., நரசிம்மன் தலைமை வகித்தார்.

Advertisement