வாய்ச்சொல் வீரர், 99 தேர்தலில் தோல்விகள்; ராகுலை விளாசிய பாஜ

1

புதுடில்லி: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக இண்டி கூட்டணி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், பாஜ எம்பி அனுராக் தாக்கூர், ராகுலை கடுமையாக சாடியுள்ளார்.

டில்லியில் நிருபர்களிடம் அனுராக் தாக்கூர் கூறியதாவது: தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து ராகுல் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது மீண்டும் மீண்டும் பழி சுமத்துகிறார்.

ராகுல் எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் அவருக்கு உண்மைகள் தெரியாது. நாட்டில் தேவையற்ற அமளியை உருவாக்குவதே அவரது இயல்பு. அவர் வாய்ச்சொல் வீரர்; எல்லாம் பூஜ்ஜியம், வெறும் வெற்றுப் பேச்சு. 99 தேர்தல்களில் தோற்ற பிறகு, தேர்தல் கமிஷனையையும், அரசையும் குறை சொல்வது அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

இப்போது அவர் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூடப் பயன்படுத்துகிறார். அவர் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கிறார்; இதுதான் அவரது வரலாறு.

அவரது முகத்தில் புழுதி படிந்திருந்தும், 99 தேர்தல்களில் தோற்கும் வரை அவர் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ராகுல் பழி சுமத்த ஒருவரையோ அல்லது குறிவைக்க ஒரு பலிகடாவையோ தேடுகிறார்.

சில சமயங்களில் தேர்தல் கமிஷன், சில சமயங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சில சமயங்களில் தலைமைத் தேர்தல் கமிஷனர், இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒன்று.

இப்போது, ​​ராகுல் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலைக்கு நிலைமை வந்துவிட்டது. இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

Advertisement