திமுகவுக்கு முதலிடம் வேண்டாமா? திருமா கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலின் மறுப்பு

1

சென்னை: இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில், தவெக வெற்றி பெற்றது. திமுக 2வது இடத்தை பிடித்தது. 2026ம் ஆண்டு பொதுத்தேர்தலை விட, இந்த இரண்டு தொகுதிகளில், திமுக ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. அதை தோல்வியில் கிடைத்த வெற்றி என்று, ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதேநேரத்தில், தபால் ஓட்டுக்களில் திமுக முதலிடம் பெற்றுள்ளது குறித்து, தவெக எம்எல்ஏ மரகதம் குமாரவேல் கூறுகையில், 'திமுக பணம் கொடுத்து, தபால் ஓட்டுக்களை வாங்கி விட்டது' என்றார்.

இதற்கிடையில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், 'இடைத்தேர்தலில் திமுகவுக்கு இரண்டாவது இடம் மட்டும் போதுமா; முதல் இடம் வேண்டாமா' என கேட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், 'இடைத்தேர்தலில் தபால் ஓட்டுக்களில், திமுக முதலிடம் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்திற்கு தவெக தள்ளப்பட்டுள்ளது. இது, அரசின் மீதான அதிருப்தி என எடுத்து கொள்ளலாமா' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஸ்டாலின், ''இந்த கேள்விகளுக்கு நீங்களே பதில் கூறி விட்டீர்கள். நான் சொல்வதற்கு எதுவும் கிடையாது,'' என்றார்.

மேலும் ஸ்டாலினிடம், திமுகவுக்கு இரண்டாவது இடம் போதுமா; முதல் இடம் வேண்டாமா என, திருமாவளவன் கேட்டிருக்கிறாரே' என்றனர். அதற்கு, எந்த பதிலும் அளிக்க மறுத்த ஸ்டாலின், காரில் ஏறி சென்று விட்டார்.

Advertisement