ஜனநாயக அமைப்பை அழிக்க விரும்பும் காங்கிரஸ்; மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடில்லி: அரசியலமைப்பு, ஜனநாயக நிறுவனங்களை காங்கிரஸ் அழிக்க விரும்புகிறது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: போராட்டம் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை; அதிகாரிகளை அப்பட்டமாகத் திட்டுவது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி இப்போது திசை மாறி சென்றுள்ளது.

விடுமுறைகளை கொண்டாடுவதை விரும்பாத, அர்ப்பணிப்பு கொண்ட ஒரு தலைவர் இருந்தால், மட்டுமே அவர்களால் தங்கள் பலத்தை அதிகரிக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியின் அடுத்த இலக்கு நீதித்துறைதான். இந்தியாவின் அனைத்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களையும் அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது.

இந்தியாவுக்கு எதிரான அனைத்துக் கும்பல்களும் ஒன்றிணைகின்றன; அதேவேளையில், தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

Advertisement