பைக் விபத்தில் வாலிபர் சாவு

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த பண்ணைகாரன்கொட்டாயை சேர்ந்தவர் அஜய்குமார், 24. இவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு, திருமண விழா மேடைகளில் பூ அலங்கரிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த, 30ம் தேதி அஜய்குமார் அவரது யமாஹா எம்.டி.15 பைக்கில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ஜெயசூர்யா, 22 என்பவரை உட்கார வைத்துக் கொண்டு சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் அருகே, பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதினார்.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும், தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் பின் மேல்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அஜய்குமாரை நேற்று முன்தினம் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர், அன்று நள்ளிரவு உயிரிழந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement