ரயில், இணைய சேவைகளை முடக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: டில்லியில், நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் உட்பட போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு

டில்லியில் மெட்ரோ மற்றும் பிற ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வரை, ரயில் மற்றும் பிற போக்குவரத்தை முடக்கி வைக்கக் கூடாது

போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு நகருக்குள் பொதுமக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்

சட்டம் - ஒழுங்கை கருதி, சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளின் தேவை குறித்து போலீஸ் அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையில்லாத தடுப்புகளை அகற்ற வேண்டும்

சட்ட விதிகளின்படி இணைய சேவைகள் தடையின்றி தொடர வேண்டும்

பி.என்.எஸ்.எஸ்., பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் இல்லாத பகுதிகளில், அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்

ஆட்கொணர்வு மனுக்கள், பெருமளவிலான தடுப்பு காவல்கள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரிக்கப்படும்

மற்றவர்களை வன்முறைக்கு துாண்டும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது

சட்டத்திற்கு புறம்பாகவும், முறையற்ற வகையிலும், யாரையும் தடுப்பு காவலில் வைக்கக் கூடாது

வழக்கறிஞர்கள் தொழில்முறை கடமைகளை ஆற்ற முட்டுக்கட்டை போடக் கூடாது

கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்தபோது டில்லியில் எந்தெந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன என்பதை விளக்கும் வரைபடத்துடன் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement