சர்வீஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரூர்: அரூர் - திருப்பத்துார் நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையிலான, ஒரு கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.

சில நேரங்களில் நான்குவழி தடுப்புகளை தாண்டி, குறுக்கே நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement