ஒரே பைக்கில் ஆபத்து பயணம் 7 இளைஞர்கள் 'அட்ராசிட்டி'

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, தேசிய நெடுஞ்சாலை யில் ஒரே பைக்கில், 7 இளைஞர்கள் ஆபத்தான வகையில் சென்ற னர். இதில், பைக் ஓட்டி சென்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், 7 இளைஞர்கள் ஆபத்தான வகையில் ஒரே பைக்கில் பயணம் செய்தனர். இதை அவ்வழியாக காரில் சென்றவர் மொபைலில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாக பைக் ஓட்டி சென்றது பலரையும் அச்சமடைய செய்தது. இதுபோன்ற ஆபத்தான வகையில் பைக் ஓட்டி சென்றவர்கள் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசன் எஸ்.எஸ்.ஐ., முருகன், வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக, ஹீரோ ஹெச்.எப்., பைக்கில் வந்த, 7 பேரை பிடித்து விசாரித்தார். இதில், பைக்கை அபாயகரமான முறையில் ஓட்டி வந்ததாக, அரூர் தாதம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர், 21, என்பவர் மீது
வழக்குப்பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தார்.

Advertisement