இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுச்செயலாளர் முரளி தலைமை வகித்தார். சென்னை மாநகர செயலாளர் சிவ விஜயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இதில், மதுரையில் உள்ள, 3,000 ஆண்டு பழமையான அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் வரும் நவ., 24ம் தேதி கார்த்திகை தீபம் தினந்தன்று நீதிமன்ற தீர்ப்பின் படி, தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட பொறுப்பாளர் ராஜி உள்பட, இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement