லாரியில் விறகு ஏற்றியபோது 'ஷாக்' அடித்து தொழிலாளி பலி
குளித்தலை:திருச்சி
மாவட்டம், மணப்பாறை அடுத்த பேரிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
சாமிராஜ், 25; விறகு ஏற்றும் கூலித்தொழிலாளி.
இவரும், இவரது அண்ணன்
கண்ணுசாமி, 30, மற்றும் அதே பகுதியை சேர்ந்த காமநாயக்கர், தேவராஜ்
ஆகியோர் சேர்ந்து, குளித்தலை அடுத்த மேல சிந்தலவாடி காவிரி
ஆற்றங்கரையில், கடந்த, 6ல் லாரியில் விறகுகளை
ஏற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது, லாரியின் மேல் சாமிராஜ்,
காமநாயக்கர் ஆகிய இருவரும் நின்றுகொண்டு, விறகுகளை வாங்கி
அடுக்கிக் கொண்டிருந்தனர். கீழே இருந்த தேவராஜ் விறகுகளை லாரியில்
துாக்கி போடும்போது மின்கம்பியில் பட்டு, சாமிராஜின் தலையில் உரசி
மின்சாரம் தாக்கியது.
இதில் மயங்கி விழுந்த சாமிராஜை மீட்டு
குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து,
திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர
சிகிச்சையில் இருந்த சாமிராஜ், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது அண்ணன் கண்ணுசாமி கொடுத்த புகார்படி,
லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ரூ.2000க்கு அதிகமான யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்
-
ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் ஏன்; அமைச்சர் நிர்மல்குமார் சொல்வது இதுதான்
-
பிறக்காத குழந்தைகளின் உணவை உண்கிறோம்: மண் வளத்தை மேம்படுத்தத் துரிதமாகச் செயல்படுங்கள்!
-
கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி
-
தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை!
-
டில்லியில் அனுமதியின்றி போராட்டம், தடுப்புகள் சேதம்; இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு