ரூ.2000க்கு அதிகமான யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்
புதுடில்லி: 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு, 0.4 சதவீத கட்டணத்தை வணிகர்களிடம் வசூலிக்க, சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. புதிய கட்டண முறை, அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனமான என்பிசிஐ அறிவித்தது
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வர உள்ளன. புத்தாண்டு, பொங்கல் பண்டிகையும் அடுத்தடுத்து வர உள்ளன. புதிய கட்டண முறையால், பண்டிகை கால விற்பனை பாதிக்கும் என வணிகர்கள் கருதினர். இக்கட்டண நடைமுறையை, சில மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
இந்நிலையில் என்பிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு,யுபிஐ பயன்படுத்தி மே ற்கொள்ளப்படும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மே ற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகள் கட்டணம் விதிக்கும் நடைமுறை, தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது எனக்கூறியுள்ளது.
மேலும்
-
ரூ.35க்கு மின்சாரம் கொள்முதல் ஏன்; அமைச்சர் நிர்மல்குமார் சொல்வது இதுதான்
-
பிறக்காத குழந்தைகளின் உணவை உண்கிறோம்: மண் வளத்தை மேம்படுத்தத் துரிதமாகச் செயல்படுங்கள்!
-
கோவில்களுக்கு மொபைல்போன் கொண்டு செல்லலாம்: கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி
-
தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றிய பக்தியே தமிழர்களின் அடையாளமான ஈடுபாட்டுக்கும் தெம்புக்கும் அடிப்படை!
-
டில்லியில் அனுமதியின்றி போராட்டம், தடுப்புகள் சேதம்; இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு
-
மதுரை அரசு மருத்துவமனையில் 2வது நாளாக போராட்டம்