வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஒரு வாக்காளரின் பெயருக்கு நேராக சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
லூதியானா கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட 38வது வார்டில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 422வது வரிசை எண்ணில் உள்ள ஒரு வாக்காளரின் விவரத்திற்கு நேராக, விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
இந்த குளறுபடியை காங்கிரஸ் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டினர். தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தியாகி பகத்சிங்கைக் கூட விட்டுவைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் தீவிர முறைகேடுகள் நடக்கின்றன என, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்
அதிகாரிகள் விளக்கம்:
சர்ச்சை வெடித்ததை அடுத்து லூதியானா மாவட்ட நிர்வாகம், இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேரிட்டிருக்கலாம் எனவும் ,இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நபர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது.
நம்ம பல் இல்லாத பக்கோடா ஆணையத்தோட பவர் அப்படி நல்லா தேடுனா ஒசாமா பின்லேடன் வீரப்பன் சீவலப்பேரி பாண்டி சதாம் உசேன் ஹிட்லர் ஆட்டோ சங்கர் இங்கிலாந்து இளவரசி டயானா போன்றோரின் பெயர்களும் போட்டோவும் கண்டிப்பாக இருக்கும் முழு வீட்டு முகவரியுடன்மேலும்
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு; ஆர்பிஐ முயற்சிக்கு கிடைத்தது பலன்
-
மகாராஷ்டிராவில் 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: பழ மரங்களை காப்பாற்ற விவசாயிகள் பகீரத முயற்சி
-
பிரதமர் வருகையின் போது மரபை கடைபிடித்துள்ளார் முதல்வர் விஜய்; நயினார் நாகேந்திரன்
-
2100க்குள் மனித இனமே அழிந்து விடும்; லான்செட் ஆய்வறிக்கையில் பகீர்
-
எதிர்க்கட்சிகளின் செயல் சுத்த முட்டாள் தனம்; ஹரீஷ் சால்வே காட்டம்
-
மதுபாட்டில்களை திரும்பப்பெறும் டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது; உயர்நீதிமன்றம்