எதிர்க்கட்சிகளின் செயல் சுத்த முட்டாள் தனம்; ஹரீஷ் சால்வே காட்டம்

17

-நமது நிருபர்-

'சுப்ரீம் கோர்ட் நோக்கிச்செல்லும் இண்டி கூட்டணியினரின் செயல் சுத்த முட்டாள் தனமானது,' என்று, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே விமர்சித்துள்ளார்.

இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் இன்று சுப்ரீம் கோர்ட்க்கு ஊர்வலமாக செல்வார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிவித்துள்ளார். எனினும், அவர்களை சந்திக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், அரசியல் பிரச்னையை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் இண்டி கூட்டணியினரின் செயல், பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே கூறியதாவது: அரசியல் கட்சிகள், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுக்க முற்படுவதற்குப் பதிலாக, நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ அல்லது வேறு எந்த அமைப்பின் மீதோ தங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இண்டி கூட்டணியினரின் செயல் சுத்த முட்டாள் தனம். தாங்கள் விரும்பியதைச் செய்வோம் என்றும் கருதி அவர்கள் செயல்படுவது போல் தெரிகிறது.

இவ்வாறு ஹரீஷ் சால்வே தெரிவித்தார்.

Advertisement