ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் பேச்சு

11

- நமது நிருபர் -

ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து, ஆண்டுதோறும் 11 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், முறைப்படி இந்த நீரை வழங்குவது கிடையாது. அதேசமயம், தமிழக அரசால் ஆந்திரா நீர்வளத்துறைக்கு கிருஷ்ணா கால்வாய் பராமரிப்புக் கட்டணமாக, ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய், வழங்கப்படுகிறது.

தமிழகத்திற்கு முறைப்படி நீரை திறக்க வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசினார். நதிகள் இணைப்பு திட்டம் குறித்தும் வலியுறுத்தினார்.விஜயவாடாவில் உள்ள இல்லத்தில் விஜயை சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே , விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் விஜய்



விஜயவாடா நகரில், ' விஜயவாடா உத்சவ் 2.0' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் ஆகியோரும் உடன் உள்ளனர்.

இதன் பிறகு விஜய் பேசுகையில்,'விழாவில் பங்கேற்றது எனது நல்வாய்ப்பு. எனக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி. தமிழகம், ஆந்திரா மாநில வளர்ச்சி குறித்து விவாதித்தேன்', என்றார்.

Advertisement