ஓய்வு பெற்றோர் அமைப்பு போராட்டம்
விழுப்புரம்: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமையகம் முன் நடந்த போராட்டத்திற்கு, தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் ராமமூர்த்தி, சி.ஐ.டி.யு., ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மேகநாதன், சகாதேவன், செயலாளர் சாமிநாதன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.
அரசாணை 123ன்படி மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றோருக்கு நிலுவையில் உள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயற்குழு உறுப்பினர் இளம்பாரதி நன்றி கூறினார்.