ஓமன் நாட்டு துணை விமானிக்கு உதவிய மாலத்தீவு துணை விமானிகள் இருவர் கைது; விசாரணை தீவிரம்

7

-நமது நிருபர்-

இந்திய விமானியை தாக்கிய ஓமன் நாட்டு துணை விமானிக்கு உதவிய, மாலத்தீவைச் சேர்ந்த இரண்டு துணை விமானிகளை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

துபாயிலிருந்து, டெல் அவிவ் நகருக்கு சென்ற, 'பிளைதுபாய்' விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த சமீபத்தில் முயற்சி நடந்தது. இந்திய விமானி ஸ்மித் மச்சார் சக துணை விமானி தாக்கி பல காயத்துடன் துணிச்சலுடன் செயல்பட்டு சதியை முறியடித்தார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல் ஹம்மாமி இந்த சதி செயலில் ஈடுபட்டார். பிடிபட்ட துணை விமானி ஹம்மாமியிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, ஓமன் நாட்டு துணை விமானிக்கு உதவிய, மாலத்தீவைச் சேர்ந்த இரண்டு துணை விமானிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் குற்றவாளியான ஓமன் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி வசித்த அதே கட்டிடத்தில் குடியிருந்து வந்துள்ளனர். இருவரும் பிளைதுபாய் நிறுவனத்திலேயே துணை விமானிகளாகப் பணிபுரிந்து வந்தவர்கள்.

இந்தத் திட்டமிட்ட பயங்கரவாதச் செயலில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, அல்லது குற்றவாளியின் திட்டங்கள் குறித்து இவர்களுக்கு முன்னரே தெரியுமா என்ற கோணத்தில் ஐக்கிய அரபு அமீரகப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த பயங்கரவாதச் சதியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement