சுதானா நகர் நல்வாழ்வு சங்கம் கூட்டம்

புதுச்சேரி: நைனார்மண்டபம் சுதானா நகர் நல்வாழ்வு சங்க கூட்டம் நடந்தது.

சுதானா நகரில் நடந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் பக்தவசலம் வரவேற்றார். தலைவர் நடராஜன், செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட நகர் மக்கள் பங்கேற்றனர்.

சுதானா நகர் பிரதான ஏரி வாய்க்காலை துர் வாரவேண்டும். மழை காலம் வருவதால், கடலுார் சாலை நைனார்மண்டபம் முதல் முருங்கப்பாக்கம் வரை வாய்க்காலை துார் வருவதற்கு நடவடிக்கை எடுத்தல், நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றை கண்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement