கவர்னர் அதிகாரம் திமுகவுக்கு இப்போது மட்டும் தெரியுதா? மகேஷூக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

46

சென்னை: திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார், திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், " திமுகவைப்பொறுத்தவரை கவர்னர் பதவி என்ற தேவையே இல்லாத ஒன்று தானே? கவர்னர் பதவியை ஆட்டுக்கு தாடியைப் போன்றது என்று ஒப்பீடு செய்வது தானே திமுக வழக்கம். கவர்னரின் அதிகாரம் பற்றி எல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது," என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கின் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement