ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்டில் சுற்றுச்சுவர், வாகன காப்பகம் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்டில் சுற்றுச்சுவர், டூவீலர் வாகன காப்பகம் இல்லாத நிலையில், அதனை விரைவில் திறக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் ரோட்டில் ரூ. 13 கோடியில் 30 பஸ்கள் நிறுத்தும் வகையிலும், 67 கடைகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லும் வகையில் நுழைவு பாதை, மின்விளக்குகள், இருக்கைகள், மின்விசிறிகள் வசதிகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், பணிகள் முடிந்து விட்டதாக நகராட்சி சார்பில் இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு கொண்டு வர வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் அனுமதி வாங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இப்பணி முடிவடைந்ததும் விரைவில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
மேலும் டூவீலர் வாகன காப்பகம் கட்டப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரும்போது டூவீலர்கள் வெயிலில் தான் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கூடுதல் நிதி பெற்று காம்பவுண்ட் சுவர், வாகன காப்பகம், உயர்மின் கோபுர விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை முழு அளவில் செய்த பின்னரே பஸ் ஸ்டாண்டை திறக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு