தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு

சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை மாறுபடும். கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை, இந்த அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த இரு தினங்களாக தங்கம் விலை ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்துள்ளது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,720க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.95 சரிந்து ஒரு கிராம் ரூ.13,590க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், 3 நாட்களில் மட்டும் ரூ.2,320 குறைந்துள்ளது.

தங்கம் விலை இனி வரும் நாட்களிலும் குறையும் என்றே கூறப்படுகிறது. அப்படி குறையும் பட்சத்தில் இந்த மாத முடிவுக்குள் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது.

வெள்ளியின் விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245க்கும், கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக வெள்ளி இதே விலையில் விற்பனையாகி வருகிறது.

Advertisement