வரத்து கால்வாயை அடைத்து புதிய பாலம்: விவசாயிகள் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கமுதி: கமுதி அருகே இலுப்பைகுளம் கிராமத்தில் கண்மாய் நீர் வரத்துகால்வாயை மறைத்து புதிதாக பாலம் அமைக்கும் பணியால் விவசாயம் பாதிக்கும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இலுப்பைகுளம் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கமுதி அருகே இலுப்பைகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். இக்கண்மாயில் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். கண்மாய் நீர் வரத்துகால்வாயை மறைத்து புதிதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய சுற்றுச்சாலைக்கு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால் விவசாயம் பாதிக்கும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இலுப்பைகுளத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:
இலுப்பைகுளம் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கண்மாயில் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். தற்போது நீர் வரத்து கால்வாயை அடைத்து புதிய பாலம் கட்டுவதால் கண்மாய்க்கு வர வேண்டிய தண்ணீர் தடைபடும். இதனால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் முழுவதும் பாதிப்பு ஏற்படும்.
இதை நம்பி இருக்கும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே புதிதாக அமைக்கும் பாலத்தை நிறுத்தி விவசாயிகளின் நலன் கருதி மாற்றுவழியில் அமைக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
ஊர்வலம் நடத்துவது தேசதுரோக செயலா? ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு