கூட்டுறவு வங்கியில் இரு நாட்கள் கடன்

சிவகங்கை: மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் குழு, தொழிற் கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி 32 கிளைகள், 127 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் வாரத்தில் செவ்வாய் தோறும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை சிங்கப்பெண்கள், மகளிர் குழு மற்றும் வீட்டு வசதி கடன் வழங்கப்படும். வெள்ளிதோறும் மத்திய கால, ஊரக தொழில், நாட்டுப்புற கலைஞர், மாற்றுத்திறனாளி, வீடு அடமான, சிறுகுறு தொழில் கடன், பெண் விவசாய தொழிலாளர் நிலம் வாங்க கடன் பெறலாம். இக்கடனுக்கான தகுதி, ஆவணங்கள் குறித்து அந்தந்த பகுதி வங்கி மேலாளர், செயலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரத்திற்கு 74027 21601 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். ///

Advertisement