இ.எஸ்., செவிலியர் கல்லுாரி கல்வியாண்டு தொடக்க விழா

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., செவிலியர் கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான தொடக்க விழா நடந்தது.

முதல்வர் பொற்செல்வி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் நிஷா செந்தில்குமார், செவிலியர் பணியின் முக்கியத்துவம், மனிதநேயம் மற்றும் கருணையை செயற்கை நுண்ணறிவு மாற்ற முடியாது என கூறினார்.

நிர்வாக தலைவர் செந்தில்குமார், கல்லுாரியின் ஆரம்பகால சவால்கள், தற்போதைய சாதனைகள் குறித்து கூறினார். உலக சுகாதார அமைப்பு ஆய்வாளர் பிரமிளா தமிழ்வாணன், செவிலியர் தொழிலின் உயர்வு, பொறுப்பு, சேவை மனப்பான்மை மற்றும் மாணவர்கள் பெற்றோரை மதித்து ஒழுக்கம், நேர்மை, கருணை, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என கூறினார்.

Advertisement