அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் வெளியேற தயாராகி உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் வெளியேற தயாராகியுள்ளனர் என்று வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செங்கோட்டையன் பேசியதாவது;
நல்லவேளை, இபிஎஸ் என்னை கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து தப்பித்து வந்து இப்போது வருவாய்துறை அமைச்சராக இருக்கிறேன். நீங்கள்தான் நீக்கினீர்கள். அவர் இப்போது கரெக்டாக எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்.
நாங்கள் அதை செய்வோம், ஆட்சி இன்றைக்கு இருக்காது, நாளைக்கு இருக்காது என்கின்றனர். என்ன... ஆட்சி இருக்காது? போக போக, யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அங்கே(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆகிக்கொண்டு இருக்கிறது.
இனி... சீக்கிரம் ஒரு 15 பேர் (எம்எல்ஏக்கள்) வெளியே வர இருக்கின்றனர். இது அவருக்கு (இபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) தெரியுமா என்று தெரியவில்லை. நேற்றைக்கே கூட்டத்தை கூட்டிவிட்டனர். பேசிக் கொண்டு இருக்கின்றனர், என்ன நடக்கப்போகிறது என்று எனக்கும் தெரியவில்லை, அவர்களுக்கும் தெரியவில்லை.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
நாகரீக காலத்தில் கட்டபொம்மனை விட எட்டப்பனுங்களுக்கு மவுசு அதிகம்.
அதற்க்கு பின்னர் தமிழ்நாட்டில் பாலும் தேனும் ஓடும் . தமிழர்களின் கவலை தீர்ந்துவிடும் .
தற்போது கமிஷன் வேட்டை நின்று போயுள்ளது. இனி கமிஷன் வேட்டை தொடரும். பலன் இல்லாமல் யாரும் கட்சி மாறுவது இல்லை.
தலைக்கு எவ்வளவு “தில்” பார்த்தியா...? 15 பேரை பர்ச்சேஸ் பண்ணப் போறோம்னு வெளிப்படையா பொதுவெளியில் பத்திரிகையில் வெளிவருவதைப் போல பகிரங்கமாக பொதுவெளியில் அறிவிக்கிறார்... இதுக்கு நீதிமன்றமும் முட்டு கொடுக்குது...? இது நாடா... இல்ல... சுடுகாடா..? என்ன எழவுய்யா நடக்குது தமிழ்நாட்ல...? இது கல்விகேள்வியில் சிறந்த... கற்றோர் சிறந்த... தினமலர் போன்ற நடுநிலை பாரம்பரிமிக்க பத்திரிகை உள்ள “தமிழ்நாடா... இல்ல... மெண்டல் ஆஸ்பெட்டலா...?” எல்லாமே மெண்டலா சுத்துதுங்க...?
எடப்பாடி க்கு புளியை கரைக்கும் வேலையை செங்கோட்டையன் உடனே நிறுத்த வேண்டுகிறோம். ஏன்னா அவுரு கூவத்தூர் போவ முடியாது. ஜெயா அம்மா ரேஞ்சுக்கு போயிட்டு திரும்பி வந்த சசிகலா கிட்டேயும் போவ முடியாது. அதுனால செங்கோட்டையன் இந்த ஸ்டேட்மெண்ட் சொல்றதுக்கு முன்னாடி ரீ கன்ஸிடர் பண்ணணும்.
குறைந்தபட்சம் 20 பேரையாவது கூட்டிவருவேன் என்றுகற்பூரம் அனைத்து சத்தியம் வாங்கிக்கிட்டுதானே கேட்டையே தொறந்தாங்க. ஓவரா சீன போடவேண்டாம்
ஐயா செங்கோட்டை ஐயா உங்களுக்கு கிடைச்சுருக்கிற 5 வருஷத்துல தமிழக மக்களுக்கு எதாவது நல்லது பண்ண முயற்சி பண்ணுங்க. எம் எல் ஏ, எம் பி க்களை விலைக்கு வாங்கிறதுலயே குறியா இருக்காதீங்க. எம் எல் ஏ, எம் பிகளை வாங்க செலவு பண்ற பணத்தை வேற எதாவது நல்ல காரியத்துக்கு செலவு பண்ணலாமே.
எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆவி மன்னிக்காது. ஆவியாவது ஜுவி ஆவது. அரசியல்வாதி என்பவன் எப்போதுமே சந்தர்பவாதிதான். எட்டப்படியேன் தான்தோன்றித்தனமான செயல்பாடுதான் அதிமுக தோற்க முக்கிய காரணம். தேர்தல் முடிந்து த வெ க ஓட கூட்டணி அமைச்சு இருந்தால் கட்சி நல்லா இருந்திருக்கும். இனிமேல் பழம் பலம் இல்லாத மரம் அதிமுக. இனி தேருவது கடினம்.
இவரைப்போலவே துரோகிகள் உருவாவதில், பெருக்குவதில் இப்படியொரு மகிழ்ச்சி இவருக்கு ......
அண்ணா திமுக எங்கே? எடப்பாடி தம்பி ஸ்டாலின் திமுக. தொண்டர்கள் இல்லாத எம் எல் ஏ வெளியேறாமல் எப்படி இருப்பார்கள். விஜய், அண்ணாமலை அல்லது பிஜேபி ஐக்கியம் தான் அரசியல் பாதுகாப்பு. எடப்பாடி பின் சென்றால் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் நிலைமை. செங்கோட்டையன் கணிப்பு குறைவு. அதிகம் பேர்கள் விலகுவர் .
எம்.ஜி.ஆர், நம்பியார் சண்டையில நாகேஷ் நடுவில புகுந்த மாதிரி இந்த அண்ணாமலை ரசிகர்கள் வேற அப்பப்ப உள்ள வந்துகிச்சு,கிச்சுமூட்டிக்கிட்டு?
இதை புதியவனான மொட்டை ராஜேந்திரன் சொல்லுவது விலா நோக சிரிப்பை வரவழைக்கிறது .மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்