தமிழ்நாடு பெயர்சூட்டலில் திமுகவின் முயற்சிகள் அடங்கியுள்ளன; ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திமுகவின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள். வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது.
தமிழகத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார். ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.
தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திமுகவின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை. தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! தமிழ்நாடு வாழ்க. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
kumarkv - chennai,இந்தியா
13 அக்,2026 - 16:59 Report Abuse
அதனால் என்ன. அப்போது உள்ளங் கையை நக்கினவங்க புறங்கையை நக்கறோம் 0
0
Reply
GMM - KA,இந்தியா
13 அக்,2026 - 16:23 Report Abuse
தமிழ் நாடு என்றால் சென்னை, கோவை, திருச்சி மாநிலமா,? பாதுகாப்பு படை இல்லையென்றால், அது நாடு என்று பொருள் படாது. திருநங்கை போன்றது தமிழ் நாடு பெயர். உடனடியாக தமிழகம் அல்லது தமிழ் மாநிலம் என்று மாற்ற வேண்டும். சொல்லின் பொருள் தெரியாமல் பெருமை வேறு. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
13 அக்,2026 - 12:00 Report Abuse
ஒரு சிறிய மாநிலத்துக்கு நாடு என பெயர் வைக்கக் கேட்டது பிரிவினைவாத எண்ணத்துடன்தான். தமிழ்நாடு என்ற பெயரை முதன்முதலில் உருவாக்கிய பாரதி அப்போதே பிற்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். மோதி உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகம் என மாற்ற வேண்டும். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
13 அக்,2026 - 11:51 Report Abuse
தமிழ்நாடு சீரழிந்ததற்கு திமுக மட்டுமே காரணம். 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
13 அக்,2026 - 11:31 Report Abuse
எதுக்கும் சன் ஷாயின் பள்ளிக்கூடத்தில் தொடப்பக்கட்டைகொண்டு கூட்டி பேருக்கி தமிழ் வளர்த்த லட்சணம் கண்டுபிடிக்கவும் . 0
0
Reply
Perumal Pillai - ,இந்தியா
13 அக்,2026 - 10:36 Report Abuse
தமிழ் தமிழ் என கூச்சல் போடுகிறாய் . எங்கள் தாய்மொழி யாகிய தமிழுக்கும் உனக்கு என்ன சம்பந்தம். 0
0
Reply
chinnamanibalan - ,
13 அக்,2026 - 10:34 Report Abuse
தமிழகத்தில் பிறந்த அனைவரும், பள்ளி கல்வியில் தாய்மொழி தமிழை கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசு உருவாக்கவில்லை. இதன் விளைவாக , தமிழகத்தில் ஆங்கில கல்விக்கு முன்னுரிமை அளித்து, தாய் மொழி தமிழ் கற்பதை தமிழகத்தில் ஒழித்து விட்டனர் என்றே கூறலாம். அரசுப் பள்ளிகளை தவிர, தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் தமிழைத் தேடும் நிலைதான் உள்ளது. இதில் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ததால் ஏற்பட்ட பயன்தான் என்ன? இந்த பெயர் மாற்றம் குறித்து திமுக பெருமைப்பட என்ன இருக்கிறது? வெட்கக்கேடு! 0
0
Reply
arunachalam - Tirunelveli,இந்தியா
13 அக்,2026 - 10:16 Report Abuse
பழைய சோற்றுக்கு சண்டை 0
0
Reply
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை
Advertisement
Advertisement