இண்டி கூட்டணி பேரணியில் பரபரப்பு; நெருக்கிய நபரை முழங்கையால் குத்திய ராகுல்

8

புதுடில்லி: டில்லியில் இண்டி கூட்டணி பேரணியில், நெருக்கிய நபரை காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கும்மாங்குத்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்தை கிளப்பி உள்ளது.

டில்லியில் இன்று ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி கட்சிகள் சார்பில் சுப்ரீம்கோர்ட் நோக்கி ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது; தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு புகார்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் நெருக்கிய நபரை காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கும்மாங்குத்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@twitter@https://x.com/BJP4India/status/2109660184851239215twitter

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பாஜ வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: அடுக்கடுக்கான பொய்கள் மற்றும் 99 தோல்விகளுக்குப் பிறகு, ராகுலின் நிலையைக் பாருங்கள்! இப்போது அவர் தனது சொந்தக் கட்சித் தொண்டர்கள் மீதே கூடக் கோபமாகப் பாய்கிறார். இவ்வாறு பாஜ விமர்சனம் செய்துள்ளது.

Advertisement