25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், தாய்மாமன் தங்க மோதிரம்
திட்டத்தின் கீழ், குழந்தை
களுக்கு மோதிரம் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜய-லட்சுமி, 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி பேசியதாவது:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தகு-தியான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்-குவது என்பது, குழந்தைகளின் பிறப்பை கொண்-டாடுவதோடு, குடும்பங்களின் மகிழ்ச்சியில் அரசும் பங்கெடுத்து கொள்வதாகும்.மேலும், இளைஞர்களுக்கு விளையாட்டு என்பது உடல் வலிமையை வளர்ப்பதற்கான ஒரு வழி-முறை மட்டுமின்றி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குழு உணர்வு மற்றும் வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்-பக்குவம் ஆகியவற்றையும் வளர்க்கும் சிறந்த தலமாகும்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து, தாய் மாமன் தங்க மோதிரம் திட்-டத்தின் கீழ், 25 குழந்தைகளுக்கு தலா, 1 கிராம் தங்க மோதிம், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, 2,718 பேருக்கு, 54.36 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசு தொகைகயை வழங்கினார். மேலும், 2.19 கோடி ரூபாய் மதிப்-பீட்டில், 4 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் பிரித்தி-விராஜ், கரூர் சப்-கலெக்டர் வெங்கடேஷ்வரன், அரசு மருத்துவக்
கல்லுாரி முதல்வர் பாரதி மோகன், மாவட்ட சுகாதார அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement