காற்றாலை மின் கம்பங்களை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

கரூர்: குடியிருப்புக்கு அருகிலும், பொதுப்பாதையிலும் உள்ள காற்றாலை மின் கம்பங்களை அகற்றக்-கோரி, அரவக்குறிச்சி அருகேயுள்ள கொடையூர் கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி அருகே கொடையூர் கிராமத்தில் உள்ள பொது பாதையில், தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை நட்டு வைத்துள்-ளது. இந்த மின்கம்பங்களால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அப்பாதையை பயன்
படுத்துவதில் பெரும் சிரமமும், தினமும் பாது-காப்பு அச்சமும் நிலவுகிறது. மேலும், தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் இடத்தை சுற்றி, 300 அடிக்குள் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அப்பகுதி கிராம மக்கள் கால்-நடை வளர்ப்பை மட்டுமே, பிரதான வாழ்வாதார-மாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
குடியிருப்புகளுக்கு மிக அருகிலேயே காற்-றாலை அமைக்கப்பட்டால்,
மக்களின் உடல்நலம்,
சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளின் வாழ்வா-தாரம் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட நிர்-வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலை-யிட வேண்டும். வருவாய்த்துறை மற்றும் தமிழ்-நாடு மின்சார வாரிய அதிகாரிகள், சம்பவ இடத்தில் நேரடியாக வந்து உரிய கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு பணி முழுமை-யாக முடிவடையும் வரை, காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அத்துடன் பாதையில் நடப்-பட்டுள்ள மின்கம்பங்களை உடனே அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement