யு.பி.ஐ., கட்டணத்துக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

கரூர்; கரூர், ஜவகர் பஜாரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர், யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கான சேவை கட்டணத்தை கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்-டத்தின் கீழ், வங்கி பண பரிவர்த்தனைகளை இல-வச யு.பி.ஐ., முறைக்கு மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுமக்களும், சிறு மற்றும்
குறு வியாபாரிகளும் ரொக்க பண
பரிவர்த்தனையை குறைத்து, யு.பி.ஐ., முறையை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2,000 ரூபாய்க்கு மேல் மேற்-கொள்ளப்படும் யு.பி.ஐ., பணபரிவர்த்தனைக-ளுக்கு வரும் அக்., 15 முதல், 0.4 சதவீதம் வரை சேவை கட்டணம் விதிக்கப்படும் என்றும், அச்-சேவை கட்டணத்தை வணிகர்களே செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்-ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளில், சிக்கித் தவித்து வரும் வணிகர்கள் மீது, இக்கட்டணத்தை சுமத்துவது நியாயமற்றது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்-கப்படுத்திவிட்டு, தற்போது கட்டணம் விதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு எதிர்ப்பு தெரி-வித்து அனைத்து கடைகளிலும், வணிகர்கள் தங்-களது சட்டையில் கண்டன பேட்ஜ் அணிந்தவாறு வழக்கமான வியாபார பணிகளில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், சங்க செயலாளர் பால்ராஜ், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்-கேற்றனர்.

Advertisement