கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் இயங்கிய கடைகளுக்கு தினம லர் செய்தி எதிரொலியால் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி செலவில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு, கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது.

இதில், நுழைவாயி ல் அருகே தற்காலிகமாக கட்டப்பட்ட 39 கடைகள் பழம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 39 கடைகளிலும் கடந்த 13 மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருளில் இயங்கி வந்தது.

இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இயங்கும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு, மின் விளக்குகள் எரிய துவங்கியுள்ளது.

Advertisement