பெண் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி, புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு அருகே சின்ன மார்க்கெட் மீன் அங்காடி உள்ளது. அதன் நுழைவு வாயிலில் இயங்கிய பாண்லே பூத் சேதமடைந்ததால் புதிதாக சிலாப் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், தற்காலிகமாக மீன் அங்காடி எதிரே பந்தல் அமைத்து பாண்லே பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பாண்லே பூத்அமைக்க மீன் அங்காடி பெண் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், மீன்களை இறக்கி, ஏற்ற பூத் இடையூறாக இருக்கும் எனக்கூறி கோஷமிட்டனர். மேலும் பூத் அமைக்க போட்டப்பட்டிருந்த சிலாப் மேடையை உடைக்க முயன்றனர். அதனால், போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், சிலாப் மேடையைவியாபாரிகள் முழுமையாக உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement