இன்று தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு
செஞ்சி: செஞ்சியில் இன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் இன்று 13ம் தேதி காலை 11:00 மணிக்கு செஞ்சி, தமிழ் திருமகள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பிரதிநிதிகள் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு தீர்மானத்தை செயல்படுத்துவது உட்பட பல்வேறு நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் , தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சர்வர் விலைகள் நான்கு மடங்கு அதிகரிப்பு; ஐடி துறையில் நிச்சயமற்ற வணிக சூழல்: ஸ்ரீதர் வேம்பு தகவல்
-
அமெரிக்காவில் தேர்தல்: டிரம்ப் கட்சிக்கு ரூ.2,641 கோடி வாரி இறைத்த எலான் மஸ்க்!
-
நர்ஸ் அடித்து கொன்று புதைப்பு கள்ளக்காதலனுக்கு 'காப்பு'
-
சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
-
இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு
-
சென்னை போராட்டத்திற்கு செல்ல முயன்ற 19 மருத்துவ பணியாளர்கள் கி.கிரியில் கைது