2 செய்திகள்

தவறான பேச்சால் கைது

திருப்பூர்: குமார் நகரை சேர்ந்த பனியன் தொழிலாளி ரவிசங்கர், 45, ஆவின் பூத் வைக்க ஏற்பாடு செய்வதாக கூறி வீரபாண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக பேசியுள்ளார். புகாரின் பேரில் தெற்கு போலீசார் பெண் வன்கொடுமை பிரிவில் வழக்குபதிந்து கைது செய்தனர்.

தொழிலாளி பலி

திருப்பூர்:- செல்லாண்டியம்மன் துறையை சேர்ந்த பனியன் தொழிலாளி நுாரே அக்ரம், 34, நண்பர் சஞ்சய், 23 உடன் டூவீலரில் சென்றபோது ரகமத்துல்லா வந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நுாரே அக்ரம் சிகிச்சை பலனின்றி இறந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement