சமத்துவ கொலு
திண்டுக்கல்: நவராத்திரி விழா கொண்டாட்டமாக திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி பள்ளியில் சமத்துவ கொலு ஏற்பாடு செய்திருந்தனர். அம்மன், அம்பிகை சிலைகள், தேவர்கள், நவராத்திரி சிறப்புகள் விளக்கும் பொம்மைகளுடன் கிறிஸ்து பிறப்பு விளக்கும் குடில், இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மசூதியின் காபா அமைப்பும் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பகவத் கீதை, குர்ஆன், பைபிள் ஏற்பாடுகளும் கொலுவில் இடம் பெற்றுள்ளது. கூட்டு பிரார்த்தனையில் மத நல்லிணக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம் வளர வேண்டும், தீய எண்ணங்கள் அழிந்து நன்மை பிறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., பயங்கரவாதி கூட்டாளிகள் ஈரோடு, திருப்பூரில் பதுங்கல்: என்.ஐ.ஏ., வலை
-
அரும்பார்த்தபுரம் பைபாசில் வடிக்கால் வாய்க்கால் அமைப்பது யாருக்காக
-
கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தால் பரபரப்பு
-
ஒருதலைபட்சமாக போலீஸ் செயல்பாடு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது
-
வேலுாரில் போதை மாத்திரை விற்ற சென்னை வாலிபர்கள் கைது
Advertisement
Advertisement