பெண்கள் சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி புஸ்சி வீதி, சின்னக்கடை மணிக்கூண்டு அருகே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் நுழைவு வாயிலில் உள்ள பாண்லே பூத் சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அதற்காக, மீன் மார்க்கெட் நுழைவு வாயிலில் வைத்து தற்காலிகமாக பாண்லே பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தங்களுடைய மீன் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீன் விற்பனை செய்யும் பெண்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் புஸ்சி வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊர்வலம் நடத்துவது தேசதுரோக செயலா? ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
Advertisement
Advertisement