சவுதியில் பணியாற்றிய பெண்ணிகளின் நிலை தெரியாமல் புதுச்சேரியில் உறவினர்கள் கதறல்
புதுச்சேரி: சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றிய பெண்ணின் நிலை தெரியாமல் புதுச்சேரியில் உறவினர்கள் கதறி வருகின்றனர்.
சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் குறிவைத்து, ஹவுதி பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவு கணை தாக்குதலில், 13 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சவுதியின் பிரபலமான ஜெர்மன் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் புதுச்சேரி காராமணி குப்பம் ஜீவானந்தம் மேல்நிலைப் பள்ளி அருகில் வசிக்கும் முஸ்தபா என்பவரின் மகள் ஆயிஷா செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் வெடிகுண்டு சம்பவம் நடக்கும் போது அதிகாலை 3 மணி வரை ஆயிஷா பதட்டத்துடன் தனது பெற்றோரிடம் பேசி உள்ளார்.
அதன் பிறகு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் அவரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, மேலும் ஆயிஷாவுடன் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய துாதரகத்தில் பாதுகாப்புடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் ஆயிஷா, அவருடன் பணியாற்றிய மற்றொரு பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்துள்ள குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.
மேலும்
-
ஊர்வலம் நடத்துவது தேசதுரோக செயலா? ஆர்எஸ்எஸ் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
மார்ச் 3ல் துவங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு; அட்டவணை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு