உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி மனு வழங்கல்

கரூர்; போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்-திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, கொ.ம.தே.க., மாவட்ட செய-லாளர் மூர்த்தி தலைமையில், அரவக்குறிச்சி அருகே கொடையூரை சேர்ந்த கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், வாங்கல் அருகே
பெரியகாளாபாளையம் முனியப்பனுாரை சேர்ந்-தவர் விவசாயி கந்தசாமி, 73. கடந்த மாதம் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, விவசாயி-களின் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதில், பங்கேற்பதற்காக கரூரில் இருந்து வேனில் சென்-றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு கந்தசாமி
உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்குத் தமிழக அரசிடமிருந்து, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற்றுத் தர, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement