போதை இல்லா பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு கலை அறிவியல் கல்லூ-ரியில் போதை இல்லா பாரதம் குறித்த விழிப் பு-ணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், ஆங்கி-லத்துறை இணை பேராசிரியருமான காளீஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதில் சிறப்பாளராக, அப்பல்லோ மருத்துவம-னையின் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் அனிதா தேவி பங்கேற்றார். தொடர்ந்து போதைக்கு எதி-ரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் செல்பி பாயின்ட் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.மேலும் சிறப்பு கருத்தரங்கம், ஊட்டச்சத்து மிகுந்த உணவு தயாரித்தல் மற்றும் ஆரோக்கிய உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு போட்-டிகள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்து அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்-பட்டது.
இந்நிகழ்வில் நுாற்று-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, போதை இல்லா பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம் என உறுதி-மொழி ஏற்றுக்கொண்டனர்.

Advertisement